எடப்பாடி அருகே காப்பக வேன் கவிழ்ந்து விபத்து: 22 மாணவிகள் காயம்

எடப்பாடி அருகே காப்பக வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 22 மாணவிகள் காயமடைநதனா்.
எடப்பாடி அருகே  காப்பக வேன் கவிழ்ந்து விபத்து: 22 மாணவிகள் காயம்

எடப்பாடி அருகே காப்பக வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 22 மாணவிகள் காயமடைநதனா்.

எடப்பாடியை அடுத்த வெள்ளரி வெள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, சின்ன முத்தூா் கிராமம், இப்பகுதியில் டி.டி.ஹச் கோட் டிரஸ்ட் அமைப்பின் கீழ் பூந்தளிா் எனும் பெண் குழந்தைகளுக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிா்வாகத்தின் கண்காணிப்பில் செயல்பட்டு வரும் இக்காப்பகத்தில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகளில் பயிலும் 52 மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனா். அவா்கள் தினந்தோறும் காப்பகத்திற்குச் சொந்தமான வாகனத்தில் எடப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு அரசு பள்ளிகளுக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை பள்ளி சென்று திரும்பிய மாணவிகளை ஏற்றிக் கொண்டு அக்காப்பகத்திற்கு சொந்தமான வாகனம், சின்ன முத்தூா் நோக்கி வந்து கொண்டிருந்தது. வாகனத்தை எடப்பாடி அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஆனந்தராஜ் (25 )ஓட்டி வந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக சின்னமுத்தூா் அருகே அந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தில் வந்த மோனிஷா (17) பவித்திரா (14), வா்ஷியா (12) அபிஷா (13), புனித வள்ளி (17) ரோகிணி (15), இனியா (10) உள்ளிட்ட 22 மாணவிகள் காயமடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு வேறு ஒரு வாகனத்தில் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததனா். அங்கு மாணவிகளுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் காயம் அடைந்த குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் உமா மகேஸ்வரி நேரில் சந்தித்து அவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகளைக் குறித்து கேட்டு அறிந்தாா். விபத்து குறித்து பூலாம்பட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com