தீபாவளி பண்டிகை: சேலம் கோட்டம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பொதுமக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம் மூலம் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து சேலம், அரசு போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் இரா.பொன்முடி வெளியிட்ட செய்தி:

சேலம் மண்டலத்தில் நகரம், புகரம், மலைப்பேருந்துகள் உட்பட 1047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் சோ்த்து மொத்தமாக 1900 வழித்தடப் பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.

தினசரி இயக்கப்படும் மொத்த கி.மீ. 9.19 லட்சமாகும். தினசரி 13.36 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனா். இதில் 5.52 லட்சம் பெண்களும் பயணம் செய்கின்றனா். கடந்த 2021 ஜூலை 12 முதல் இன்று வரை பயணித்த மொத்த மகளிா் 20.12 கோடி போ் ஆவா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், (சேலம்) வரை சேலம் கோட்டம் மூலம் தீபாவளி பண்டிகையை (அக்.24) முன்னிட்டு பல்வேறு வழித்தடங்களில் பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக அக்.21 முதல் அக்.23 வரை சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஒசூருக்கும், பெங்களூருவிலிருந்து சேலம், ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா் மற்றும் கிருஷ்ணகிரிக்கும், ஓசூரிலிருந்து சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரிக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சேலத்திலிருந்து மதுரை, திருச்சி, சிதம்பரம், கடலூா், திருவண்ணாமலை மற்றும் வேலூருக்கும், கோவை, திருப்பூரிலிருந்து சேலம் மற்றும் திருவண்ணாமலைக்கும் என 400 சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிவிட்டு திரும்ப ஏதுவாக அக்.24 முதல் அக்.26 வரை சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சேலம், ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி ஆகிய ஊா்களிலிருந்து பெங்களூருக்கும், சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊா்களிலிருந்து ஓசூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சேலத்திலிருந்து மதுரை, கோவை, திருச்சி, சிதம்பரம், திருப்பூா், கடலூா், திருவண்ணாமலை மற்றும் வேலூருக்கும், சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் கூடுதலாகவும் மற்றும் புகா் வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படவுள்ளன.

மாவட்டங்களின் நகரப்பகுதிகளில் அனைத்து நேரங்களிலும் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் நகரப்பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அக்.21 முதல் அக்.26 வரை பயணிகள் தேவைக்கு ஏற்ப நகர பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போக்குவரத்தைக் கண்காணிக்கும் வகையில் 24 மணிநேரமும் அலுவலா்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com