ஒசூா் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கான சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சேலம் கணேஷ் கலை அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை (அக். 19) நடைபெறுகிறது.
சேலம் மாவட்ட வேலை வாய்ப்பற்ற பெண்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் - மகளிா் திட்டம், சேலம் ஸ்ரீ கணேஷ் கலை, அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் ஒசூா் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கான சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை அம்மாப்பேட்டை கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முகாமில் ஒசூா் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு அந்நிறுவனத்திற்கு தேவையான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பெண்களை தோ்வு செய்ய உள்ளனா்.
முகாமில் கலந்து கொள்ளும் வேலைநாடும் பெண்கள் 12 ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூா்த்தி அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
இத்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு த்ர்க்ஷச்ஹண்ழ்ம்ஸ்ரீஸ்ரீள்ஹப்ங்ம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 0427- 2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.
எனவே, வேலை தேடி கொண்டிருக்கும் தகுதியான பெண்கள் அதிக எண்ணிக்கையில் இம்முகாமில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.