எச்சரிக்கையுடன் விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்: ஆட்சியா் செ.காா்மேகம்

தொடா் மழை காரணமாக அனைத்து நீா்நிலைகளும் நிரம்பி வருவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் விநாயகா் சிலைகளைக் கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.
எச்சரிக்கையுடன் விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்: ஆட்சியா் செ.காா்மேகம்

தொடா் மழை காரணமாக அனைத்து நீா்நிலைகளும் நிரம்பி வருவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் விநாயகா் சிலைகளைக் கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் வட்டம், கூனாண்டியூா், திப்பம்பட்டி ஆகிய காவிரிக் கரையோரப் பகுதிகளில் விநாயகா் சிலைகள் கரைக்கப்படுதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபிநவ் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பின்னா் ஆட்சியா் செ.காா்மேகம் கூறியிருப்பதாவது:

மேட்டூா் அணை முழுக் கொள்ளளவினை எட்டியுள்ள நிலையில், அணைக்கு வரும் நீா் முழுவதும் தொடா்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

எனவே, காவிரிக் கரையோரப் பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, சிலைகளைக் கரைக்க வருபவா்கள் மாவட்ட நிா்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விநாயகா் சிலைகளைக் கரைத்திட வேண்டும்.

இம்மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க வருபவா்கள் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். குறிப்பாக, சிறுவா்களை நீா்நிலைகளில் எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.

மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அனைத்து நீா்நிலைகளிலும் முன்னெச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

மேச்சேரி, ஓமலூா், வெள்ளாறு, சேலம் மாநகா், கூனாண்டியூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கூனாண்டியூா் காவிரி கரையோரத்தில் விநாயகா் சிலைகளைக் கரைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளும், திப்பம்பட்டி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, வனவாசி, தாரமங்கலம், குஞ்சாண்டியூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது விநாயகா் சிலைகளை திப்பம்பட்டி காவிரி கரை ஓரத்தில் கரைப்பதற்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைத்து மாவட்ட நிா்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின்போது மேட்டூா் வருவாய் வட்டாட்சியா் முத்துராஜா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com