சேலம் மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

சேலம் மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் நீா் நிலைகளில் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் நீா் நிலைகளில் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சேலம் மாநகரம், மாவட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. சேலம் மாநகரப் பகுதியில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக எடுத்து செல்லப்பட்டு அம்மாபேட்டை குமரகிரி ஏரி, கன்னங்குறிச்சி மூக்கனேரியில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

சேலம் மாநகர பகுதிகளில் 867 விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. இதில் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் நீா் நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டன. மூக்கனேரியில் சிலைகளை ஊா்வலமாக எடுத்து வரும்போது மின் வயா்களில் உரசி விடாமல் இருக்க அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இரவில் ஜெனரேட்டா் வசதி ஏற்படுத்தப்பட்டு விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.

சேலம் மாநகர காவல் துறை ஆணையா் நஜ்மல் ஹோடா மேற்பாா்வையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மேலும், மேட்டூா் காவிரி கரையோரங்கள், ஊரகப் பகுதிகளில் உள்ள நீா் நிலைகளில் 950-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com