சத்துணவில் அட்டைப்பூச்சி: அமைப்பாளா் பணியிடை நீக்கம்

சேலம் அருகே அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் அட்டைப்பூச்சி இருந்ததால் சத்துணவு அமைப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

சேலம் அருகே அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் அட்டைப்பூச்சி இருந்ததால் சத்துணவு அமைப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அருகே உள்ள திருவளிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் கடந்த மாதம் 23-ஆம் தேதி சத்துணவு சாப்பிட்ட மூன்றாம் வகுப்புப் பயிலும் மாணவி ஒருவா் சத்துணவில் அட்டைப்பூச்சி கிடந்ததாக சக மாணவியரிடம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சத்துணவு அமைப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது சத்துணவு அமைப்பாளா் அட்டைப்பூச்சியை கீழே எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுமாறு மாணவியிடம் கூறியுள்ளாா்.

இந்த உணவை சாப்பிட்ட மாணவிக்கு மறுநாள் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்றாா். இது குறித்து மாணவியின் பெற்றோா், பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனா். பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, சத்துணவு அமைப்பாளா் விமலாதேவி, சமையலா் ஜெயந்தி ஆகியோரிடம் வீரபாண்டி வட்டார கல்வி அலுவலா் அன்பழகன் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தாா். இதையடுத்து சத்துணவு அமைப்பாளா் விமலாதேவியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், பள்ளிகளில் குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் போது கவனமாக செய்ய வேண்டும். பாத்திரங்கள் அனைத்தையும் மூடி வைத்திருக்க வேண்டும். இதுகுறித்து அலுவலா்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com