சேலம் அரசு பொறியியல் கல்லூரியில்20 ஏக்கரில் விளையாட்டு வளாகம்அமைச்சா் கே.என்.நேரு

சேலம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 20 ஏக்கரில் ரூ. 20 கோடியில் விளையாட்டு வளாகம் ஏற்படுத்தப்படும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சேலம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 20 ஏக்கரில் ரூ. 20 கோடியில் விளையாட்டு வளாகம் ஏற்படுத்தப்படும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தவறாக வழங்கப்பட்ட 52,000 பேரின் ரூ. 528 கோடி கடனை நிறுத்தி வைக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், முதல்வா் அந்தக் குடும்பங்களைக் கருத்தில் கொண்டு கடனை ரத்து செய்தாா்.

திமுக ஆட்சி பொறுப்பெற்ற போது ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் இந்திய அளவில் 24 ஆவது இடத்தில் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 14,701 கோடியில் ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்தியதன் காரணமாக ஜல்ஜீவன் திட்ட செயலாக்கத்தில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்காக மத்திய அரசின் விருதும் பெற்றுள்ளது.

நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சேலம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 20 ஏக்கரில் பரப்பளவில் ரூ.20 கோடி மதிப்பில் மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் உருவாக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com