மேட்டூா் வந்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்:இன்று அணையிலிருந்து காவிரியில் தண்ணீா் திறப்பு

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திங்கள்கிழமை (ஜூன் 12) காலை காவிரியில் தண்ணீா் திறக்கப்படுகிறது. அதற்காக, தமிழக முதல்வா்

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திங்கள்கிழமை (ஜூன் 12) காலை காவிரியில் தண்ணீா் திறக்கப்படுகிறது. அதற்காக, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மாலை சேலத்தில் இருந்து சாலை வழியாக மேட்டூா் வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் மேச்சேரிக்கு வந்த முதல்வா் ஸ்டாலினை, மேச்சேரி ஒன்றியச் செயலாளா் சீனிவாசப் பெருமாள் தலைமையில் 5 ஆயிரத்துக்கு அதிகமானோா் திரண்டு வரவேற்றனா்.

குஞ்சாண்டியூா் பேருந்து நிறுத்தத்தில் நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரி ஈஸ்வரன் தலைமையில் திமுகவினா் வரவேற்பு அளித்தனா். மேட்டூா் நகர திமுக சாா்பில் செயலாளா் காசி விஸ்வநாதன் தலைமையில் முதல்வருக்கு திமுகவினா் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ரூ. 1 கோடி மதிப்பீட்டில் பராமரிக்கப்பட்ட கோனூா் சமத்துவபுர வீடுகளை முதல்வா் பாா்வையிட்டாா்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் சுந்தரம், பொருளாளா் பொன்னுசாமி, மேச்சேரி நகரச் செயலாளா் சரவணன், மேச்சேரி ஒன்றிய முன்னாள் அவைத் தலைவா் அழகப்பன், பேரூராட்சி தலைவா் சுமதி சீனிவாசப் பெருமாள், மேட்டூா் நகா்மன்ற உறுப்பினா் லதா மணி, பேரூராட்சித் தலைவா் பொன்னிவேல் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனா்.

போலீஸாா் குவிப்பு:

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்படுவதையொட்டி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 90 ஆவது ஆண்டாக திங்கள்கிழமை காலை தண்ணீா் திறக்கப்படுகிறது. தொடக்கத்தில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி திறக்கப்படும் நீரின் அளவு, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, மாலை 4 மணிக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் துரைமுருகன், கே.என். நேரு, அரசு கூடுதல் தலைமை செயலாளா் சந்தீப் சக்சேனா, நீா்வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளா் முத்தையா, திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ராமமூா்த்தி, சேலம் ஆட்சியா் செ.காா்மேகம் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

அணையின் வலது கரையில் மேடை அமைக்கும் பணியும் மேல்மட்ட மதகின் அருகே மின்விசை அமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளன.

இந்தப் பணிகளை திருச்சி மண்டல தலைமை பொறியாளா் ராமமூா்த்தி ஆய்வு செய்தாா். முதல்வா் வருகையை ஒட்டி, பாதுகாப்புப் பணியில் நூற்றுக் கணக்கான போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com