சங்ககிரி அருள்மிகு வஸந்தவல்லபராஜபெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு 

சங்ககிரி அருள்மிகு வஸந்தவல்லபராஜபெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு விழா நடைபெற்றது. 
சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் உற்சவ மூர்த்தி கருடவாகனத்தில் பரமபதவாசல் வழியாக திங்கள்கிழமை அதிகாலை வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் உற்சவ மூர்த்தி கருடவாகனத்தில் பரமபதவாசல் வழியாக திங்கள்கிழமை அதிகாலை வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சங்ககிரி அருள்மிகு வஸந்தவல்லபராஜபெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு விழா நடைபெற்றது. 

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியையொடட்டி பரமபதவாசல் திறப்பு விழா திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது. 

வைகுந்த ஏகாதசியையொட்டி ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோயிலில் அருள்மிகு வசந்தவல்லபராயபெருமாள் சுவாமிக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு உற்சவ மூர்த்தி சுவாமி கருடவாகனத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டார். 

தொடர்ந்து மார்கழி மாத தினசரி வழிபாடான திருப்பாவை பாடல்களை பாடிய பின்னர் சுவாமி அதிகாலை பரமபதவாசல் வழியாக  வெளியே வந்தார்.  வெளியே வந்த  சுவாமியை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் முழங்க வரவேற்று வழிபட்டனர்.  அதனையடுத்து பட்டாச்சாரியர்கள் சுவாமி பரமபதவாசல் வழியாக வந்தப் பின்னர் பெருமாள் சிறப்பு பக்தி பாடல்களை பாடினர். 

இதனையடுத்து சுவாமி கோயில் வெளி பிரகாரத்தில் வலம் வந்து ஆலயத்தை அடைந்தது. சுவாமி பரதபதவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த போது பெண்கள் சுவாமிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று வழிப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com