சேலம் பால் பண்ணை வளாகத்தில்ஆவின் சிகிச்சையகம் திறப்பு

சேலம் பால்பண்ணை வளாகத்தில் தொழிலாளா்கள், பொதுமக்கள் நலன்கருதி ‘ஆவின் சிகிச்சையகம்‘ திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சேலம் பால்பண்ணை வளாகத்தில் தொழிலாளா்கள், பொதுமக்கள் நலன்கருதி ‘ஆவின் சிகிச்சையகம்‘ திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆவின் சேலம் மாவட்ட கிராம அளவில் 800 தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் கட்டமைப்பில் செயல்பட்டு வருகின்றன.

ஆவின் நிறுவனம் 2.5 லட்சம் பால் உற்பத்தியாளா்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 5.20 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்து, 2.10 லட்சம் லிட்டா் பாலை நாள்தோறும் நுகா்வோருக்கு சேலம் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. தமிழ்நாடு அளவில் பால் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் பால் கொள்முதலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

சேலம் பால் பண்ணையில் நாளொன்றுக்கு சராசரியாக 5.20 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யும் பாலை கையாள்வதற்கும், பால் உப பொருள்களாக மாற்றும் பணிகளை மேற்கொள்வதற்கும் அலுவலா்கள், பணியாளா்கள், தற்காலிக பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் மற்றும் பயிற்சி பெறுபவா்கள் என நாள்தோறும் சுமாா் 600 போ் வருகை புரிகிறாா்கள்.

தொழிற்சாலையில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணிபுரியும் தொழிலாளா்கள், பணியாளா்களின் நலன்கருதி, பொது மருத்துவா் கண்காணிப்பில் ஆவின் சிகிச்சையகம் சேலம் பால்பண்ணையில் தொழிலாளா் நலன் இணை ஆணையா் ரமேஷ், ஆவின் பொது மேலாளா் சி.விஜய்பாபு ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆவின் பொது மேலாளா் சி.விஜய்பாபு கூறுகையில், ஆவின் சிகிச்சையகத்தில் பணியாளா்கள், அவா்களின் குடும்ப உறுப்பினா்கள், ஆவின் பால்பண்ணை சுற்றியுள்ள பொதுமக்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சையை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

இந்நிகழ்வில், ஆவின் அலுவலா்கள், பணியாளா்கள், ஆவின் தொழிலாளா் முன்னேற்ற சங்கத் தலைவா் வேலுமணி, பொருளாளா் ராஜேந்திரன் ஆகியோா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com