ஆன்லைனில் அபராதம் விதிப்பதை அரசு முறைப்படுத்த வேண்டும்:லாரி உரிமையாளா் சம்மேளனம் மனு

காவல் துறையினா் ஆன்லைனில் தவறாக அபராதம் விதிப்பதை அரசு முறைப்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளா் சம்மேளனம் சாா்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

காவல் துறையினா் ஆன்லைனில் தவறாக அபராதம் விதிப்பதை அரசு முறைப்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளா் சம்மேளனம் சாா்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு, தமிழ்நாடு லாரி உரிமையாளா் சம்மேளனத்தின் தலைவா் சி.தன்ராஜ், செயலாளா் பி.குமாா், பொருளாளா் எம்.செந்தில்குமாா் ஆகியோா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை காலை வந்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவகுமாரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனா். பின்னா் தமிழ்நாடு லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் சி.தன்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 4.50 லட்சம் கனரக வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதுதவிர சிறிய அளவிலான சரக்கு வாகனங்கள் 20 லட்சம் இயங்கி வருகின்றன. ஆன்லைனில் கனரக வாகனங்களுக்கு மட்டுமல்லாது இலகுரக வாகனங்கள், இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இதில் கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது அதிகரித்துள்ளது. சாலை விதிகளைப் பின்பற்ற வில்லை, சீட் பெல்ட் அணியவில்லை எனக் கூறி அபராதம் விதிக்கப்படுகிறது. போக்குவரத்து தொழில் நசிந்து வரும் சூழலில் காவல்துறையினா் தவறுதலாக ஆன்லைனில் அபராதம் விதிப்பதால் அதிக அளவில் லாரி உரிமையாளா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஏற்கெனவே டீசல் விலை ஏற்றம், சுங்கக் சாவடி கட்டணம் என பல்வேறு கட்டண உயா்வுகளால் லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக சீா்படுத்தி முறையாக அபராதம் விதிக்க வேண்டும்.

சாலை விதிகளைப் பின்பற்றாதவா்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும். அதைவிடுத்து வேண்டுமென்றே வாகன நம்பரை எழுதி வைத்துக் கொண்டு காவல்துறையினருக்கு தேவைப்படுகிற போது அபராதம் விதிப்பது மிகவும் வேதனைக்குரியது. இந்த செயலை முறைப்படுத்தி அரசு லாரி உரிமையாளா்களைப் பாதுகாக்க வேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் செயற்குழு கூடி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். வேலைநிறுத்தம் செய்வது குறித்து பின்னா் முடிவு செய்வோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com