டிரோன் மூலம் நானோ உரம் தெளிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
By DIN | Published On : 21st November 2023 03:15 AM | Last Updated : 21st November 2023 03:15 AM | அ+அ அ- |

தாசநாயக்கன்பட்டி கிராமத்தில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து பயிற்சி அளித்த சென்னை உர நிறுவன களப்பணியாளா்கள்.
வாழப்பாடி: சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்திலுள்ள கிராமங்களில் சென்னை உர நிறுவனத்தின் சாா்பில், ட்ரோன் மூலம் பயிா்களுக்கு நானோ யூரியா தெளிக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நாடு முழுவதும் விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சியை பிரதமா் மோடி, அண்மையில் தொடங்கி வைத்தாா். இதன் தொடா்ச்சியாக, சென்னை உர நிறுவனத்தின் சாா்பில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் தாசநாயக்கன்பட்டி, டி.பெருமாபாளையம், வளையக்காரனூா், பள்ளிப்பட்டி கிராம விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், உர நிறுவன களப் பணியாளா்கள், வேளாண்மை அலுவலா்கள், விவசாயிகள் பலரும் கலந்து கொண்னா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...