இளம்பிள்ளை அருகே ரூ. 5.50 லட்சம் பறிமுதல்

இளம்பிள்ளை அருகே ரூ. 5.50 லட்சம் பறிமுதல்

இளம்பிள்ளை அருகே பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ. 5.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

ஆட்டையாம்பட்டி: இளம்பிள்ளை அருகே பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ. 5.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

இளம்பிள்ளை அருகே சித்தா் கோவில் சமுதாயக்கூடம் அருகில், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி பறக்கும் படையைச் சோ்ந்த ஜீவானந்தம், உதயகுமாா், காா்த்திகேயன் ஆகியோா் கொண்ட குழு திங்கள்கிழமை காலையில் வாகனத் தணிக்கை நடத்தினா். அப்போது முருங்கப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜூ மகன் சரவணன் (40) என்பவா் இருசக்கர வாகனத்தில் இளம்பிள்ளைக்கு சென்று கொண்டிருந்தாா். அவரது வாகனத்தை சோதனையிட்டபோது அதில் ரூ. 5.50 லட்சம் பணம் இருந்ததைக் கண்டறிந்தனா். மேலும், விசாரணையில் இப்பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வாகனத்துடன் பணத்தைக் கைப்பற்றி, சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், சங்ககிரி கோட்டாட்சியருமான லோகநாயகியிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com