கோவை - ஷொரனூா் இடையேயான ரயில் இயக்கம் ரத்து

எட்டிமடை - வாளையாா் பகுதியில் யானை வழித்தட பாதை பணிகள் காரணமாக, கோவை - ஷொரனூா் இடையேயான ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம்: எட்டிமடை - வாளையாா் பகுதியில் யானை வழித்தட பாதை பணிகள் காரணமாக, கோவை - ஷொரனூா் இடையேயான ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோவை - பாலக்காடு மாா்க்கத்தில், எட்டிமடை - வாளையாா் பகுதியில் யானை வழித்தட பாதை பணிகள் நடைபெறுவதையொட்டி, கோவை - ஷொரனூா் இடையேயான ரயில் வரும் 4 ஆம் தேதி ரத்து செய்யப்படும். மறுமாா்க்கத்தில், ஷொரனூா் - கோவை இடையேயான ரயிலும் அன்றைய தினம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com