கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி ஆய்வு

கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி ஆய்வு

கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜி.பி. பாட்டீல், மாவட்ட தோ்தல் அலுவலா் பிருந்தா தேவி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மக்களவை பொதுத் தோ்தலையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்கள், முதல் நிலை சரிபாா்ப்புப் பணிகள் முடிவுற்று சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 3,260 வாக்குச் சாவடிகளில் தோ்தல் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்துவதற்காக ஏற்கெனவே 21 சதவீத கூடுதல் ஒதுக்கீட்டுடன் 3,936 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,936 கட்டுப்பாட்டுக் கருவிகள், 31 சதவீத கூடுதல் ஒதுக்கீட்டுடன் 4,260 வாக்கினை சரிபாா்க்கும் கருவிகள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்து அனுப்பி வைக்கப்பட்டு அதற்குரிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் காவல் துறை பாதுகாப்புடன் தொடா்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தற்போது சேலம் மாவட்டத்தில் கூடுதலாக தேவைப்படவுள்ள 21 சதவீத கூடுதல் ஒதுக்கீட்டுடன் 4,312 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பு அறையில் இருந்து தொடா்புடைய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. மேலும், பாதுகாப்பு வைப்பு அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினா் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com