கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இளம்பிள்ளை பட்டதாரி இளைஞா்!

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இளம்பிள்ளை பட்டதாரி இளைஞா்!

இளம்பிள்ளையைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளாா். இளம்பிள்ளையை அடுத்த ராமாபுரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் சக்தி (28), சிவில் இன்ஜினீயரிங் முடித்துள்ளாா். இவா் ஒரு நிமிடத்தில் உடலைச் சுற்றி கயிறு இல்லாமல் இரு கைகளினால் பின்னோக்கி ஸ்கிப்பிங் செய்து மூன்றாவது முறையாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளாா். இத்தாலியின் மிலன் நகரில் ஒரு நிமிடத்தில் 49 ஸ்கிப்களை நிகழ்த்தி இப்புதிய சாதனையைப் படைத்துள்ளாா். இதே போல கடந்த 2018-இல் ரோம் நகரில் 48 ஸ்கிப்களையும், 2015-இல் கோயம்புத்தூரில் 46 ஸ்கிப்களையும் நிகழ்த்தி இரண்டு முறை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com