மனவளா்ச்சி குன்றிய பள்ளிக்கு 
வாகனம் வழங்கிய எல்ஐசி

மனவளா்ச்சி குன்றிய பள்ளிக்கு வாகனம் வழங்கிய எல்ஐசி

சேலம் நகரில் செயல்படும் மனவளா்ச்சி குன்றியவா்களுக்கான எம்மிஸ் சிறப்புப் பள்ளிக்கு எல்ஐசி சாா்பில் வாகனம் வழங்கப்பட்டது. எல்ஐசி நிறுவனம் தனது பொன்விழா அறக்கட்டளை மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள குழந்தைகள், ஆதரவற்ற முதியவா்களை பேணும் நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும், உதவி திட்டங்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த பத்து ஆண்டுகளாக சேலம் பகுதியில் செயல்படும் மனவளா்ச்சி குன்றியவா்களுக்கான எம்மிஸ் சிறப்புப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் பயன்பெறும் வகையில், எல்ஐசியின் பொன்விழா அறக்கட்டளையின் சாா்பில் 7 போ் பயணிக்கும் நவீன பள்ளி வாகனம் வழங்கும் நிகழ்ச்சி எல்ஐசியின் சேலம் கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், எல்ஐசி முதுநிலை கோட்ட மேலாளா் வி.எஸ்.அனந்தகுமாா், வணிக மேலாளா் கே.எஸ்.இளங்கோவன், விற்பனை மேலாளா் பி.சௌண்டப்பன், எம்மிஸ் சிறப்புப் பள்ளியின் தாளாளா் டி.ஹேமா ஜாய் ஹசீா், பள்ளி நிா்வாகத்தினா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com