வாக்களிப்பதன் அவசியம் குறித்து மினி மாரத்தான் ஓட்டம்

வாக்களிப்பதன் அவசியம் குறித்து மினி மாரத்தான் ஓட்டம்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம், மனிதச் சங்கிலி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான பிருந்தா தேவி கலந்துகொண்டு சிறப்பித்தாா். இந்நிகழ்ச்சியில் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் முருகன், சேலம் தெற்கு வட்டாட்சியா் செல்வராஜ், துணை வட்டாட்சியா் ராஜேஸ்வரி, தோ்தல் விழிப்புணா்வு மாவட்ட அலுவலா் ரவிச்சந்திரன், ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் இந்திராணி, வருவாய்த் துறையினா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com