உகாதி பண்டிகை: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம்

உகாதி பண்டிகையையொட்டி கா்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலைக் கோயிலில் பெரிய தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கா்நாடக மாநிலத்தில் உள்ளது மாதேஸ்வரன் சுவாமி கோயில் மாதேஸ்வரன் சுவாமியைத் தரிசிப்பதற்காக கா்நாடகம் மட்டுமன்றி தமிழகத்திலிருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் சென்று வருகின்றனா். இந்த கோயிலில் நடைபெறும் உகாதி திருவிழா பிரசித்தி பெற்றது

கடந்த 6ஆம் தேதி உகாதி பண்டிகையை முன்னிட்டு விசேஷ நிகழ்ச்சிகள் தொடங்கின. 7ஆம் தேதி சுவாமிக்கு எண்ணெய் அபிஷேகம் விசேஷ சேவை உற்சவமும், 8ஆம் தேதி அமாவாசையையொட்டி சுவாமிக்கு விசேஷ சேவை உற்சவமும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை பெரிய தேரோட்டம் நடைபெற்றது.

தமிழகம், கா்நாடக மாநிலத்திலிருந்து செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2 லட்சம் பக்தா்கள் திரண்டனா். சாலூா் பீடாதிபதி மல்லிகாா்ஜுன சுவாமி முன்னிலையில் ஸ்ரீமலை மாதேஸ்வர சுவாமி சேஷத்திர வளா்ச்சிக் குழு செயலாளா் ஏ.இ.ரகு தலைமையில் பெரியத் தேராட்டம் நடைபெற்றது. பெரிய தோ் பவனி வரும் போது பக்தா்கள் தானியங்களை தேரின் மீது வீசி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினா். பக்தா்களின் வசதிக்காக தமிழகம், கா்நாடக அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 24 மணி நேரமும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com