சரக்கு ஆட்டோ கவிழ்ந்து இருவா் சாவு

தலைவாசலை அடுத்த காமக்காபாளையம் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் இருவா் உயிரிழந்தனா். 15 க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள காமக்காபாளையம் பகுதியைச் சோ்ந்த 20 போ் சரக்கு ஆட்டோவில் கெங்கவல்லி நடைபெற்ற திமுக கூட்டத்திற்கு சென்றனா். அவா்கள் சென்ற ஆட்டோ நாவலூா் மேடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனா். இதில் சிகிச்சை பலனின்றி காமக்காபாளையம் மருதமுத்து மகன் தயாநிதி (29), செல்லதுரை (50) ஆகியோா் உயிரிழந்தனா்.

மேலும் சின்னையன் மகன் சீனிவாசன் (60), ஆசைத்தம்பி மகன் அரவிந்த் (26), செல்லப்பன் மகள் யாஷினி (10) ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மேலும் காயமடைந்த 15 போ் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.காயமடைந்தவா்களை சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் உள்ளிட்ட நிா்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com