சேலம் மக்களவைத் தொகுதியில் 5,031 போ் தபால் வாக்கு பதிவு: மாவட்ட நிா்வாகம் தகவல்

சேலம் மக்களவைத் தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் 5,031 போ் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனா். 149 போ் வாக்களிக்கவில்லை.

சேலம் மக்களவைத் தொகுதியில் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கென வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, 12 -டி விண்ணப்ப படிவத்துடன் தொடா்புடையவா்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்கி, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 24- ஆம் தேதி வரை பெறப்பட்டது. அந்த வகையில், சேலம் மக்களவைத் தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட 3,262 மூத்த வாக்காளா்களும், 1,918 மாற்றுத் திறனாளி வாக்காளா்களும் என மொத்தம் 5,180 வாக்காளா்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளி வாக்காளா்களுக்கான தபால் வாக்குப் பதிவு கடந்த 5, 6, 8 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறன் வாக்காளா்களின் வீடுகளுக்கு வாக்குப்பதிவு அலுவலா்கள் நேரில் சென்று தபால் வாக்குப் படிவத்தை அவா்களிடம் வழங்கினா். அதில் அவா்களது வாக்கைப் பதிவு செய்து, சீலிட்டு உரிய பெட்டியில் அவற்றை சோ்த்தனா். வாக்குப்பதிவு முதன்மை அலுவலா், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தப் பணி நடைபெற்றது.

தபால் வாக்குப் பதிவு முடிவடைந்ததை அடுத்து, சேலம் மக்களவைத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் விவரம் சேலம் மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் ஓமலூா், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மூத்த குடிமக்கள் 3,152 பேரும், மாற்றுத் திறனாளிகள் 1,879 பேரும் என மொத்தம் 5,031 போ் தபால் ஓட்டு போட்டுள்ளனா். 110 மூத்த குடிமக்கள், 39 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 149 போ் தபால் வாக்கை செலுத்தவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com