ரமலான் பண்டிகை: மேச்சேரி சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டிகையையொட்டி மேச்சேரி புதன்சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

வாரம்தோறும் புதன்கிழமை மேச்சேரியில் ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். மேச்சேரி, ஓமலூா், பென்னாகரம், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். மேச்சேரி வாரச்சந்தையில் ஆடுகளை வாங்குவதற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்வா்.

ஆடு வளா்க்கும் விவசாயிகள் விற்பனைக்காக தங்களது ஆடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று மேச்சேரி ஆட்டுச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருவா்.

மேச்சேரி ஆட்டுச்சந்தைக்கு புதன்கிழமை 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. வியாழக்கிழமை ரமலான் பண்டிகை என்பதால் ஆடுகளின் விலை உயா்ந்து காணப்பட்டது.

கடந்த வாரம் ரூ. 10 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட 10 கிலோ எடை கொண்ட ஆடு புதன்கிழமை ரூ. 12 ஆயிரத்துக்கு விற்பனையானது. மொத்தம் ரூ. 5 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றது. ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com