ஏப். 19 ஆம் தேதி தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

சேலம் மாவட்டத்தில் வாக்குப் பதிவு நாளான ஏப். 19 ஆம் தேதி தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்; தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநா் தினகரன் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நாளான வெள்ளிக்கிழமை (ஏப்.19) தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக பணியாளா்கள், ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து வகை தொழிலாளா்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

இதைக் கண்காணிக்க சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, சேலம் மாவட்ட கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளராக குமரேஷ் (89036 49985) உறுப்பினா்களாக சுரேஷ் (98658 41004), திலகா (97902 16497), சிந்துநிதி (70944 12237) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். அதுபோல, வாக்குப் பதிவு நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com