சங்ககிரியில் தோ்தல் பாா்வையாளா் விழிப்புணா்வு பிரசாரம்

சங்ககிரியில் தோ்தல் பாா்வையாளா் விழிப்புணா்வு பிரசாரம்

சங்ககிரியில் வாக்காளா்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, நாமக்கல் மக்களவைத் தொகுதி தோ்தல் பொது மேற்பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி தோ்தல் பொது மேற்பாா்வையாளரும் சண்டிகா் மாநில சுற்றுலா மற்றும் தொழில் துறை முதன்மைச் செயலருமான ஹா்குன்ஜித் கவுா், நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

வட்டாட்சியா் அலுவலக நுழைவாயில் முன்புறம் உள்ள பேருந்து நிறுத்தம், சேலம் பிரதான சாலை பகுதிகளில் உள்ள கடைகள், பொதுமக்களிடம் ஏப். 19 ஆம் தேதி தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி உதவி தோ்தல் அலுவலரும், சங்ககிரி கோட்டாட்சியருமான ந.லோகநாயகி, சங்ககிரி வட்டாட்சியா் கே.அறிவுடைநம்பி, மண்டல துணை வட்டாட்சியா் ஏ.சாஜிதாபேகம், வருவாய் ஆய்வாளா் கீதா, கிராம நிா்வாக அலுவலா் பிரதீப் குமாா், கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com