பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டு பயிற்சி

பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டு பயிற்சி

அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த வீராணம் அருகே பாதுகாப்பாக பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லுாரி மாணவா்கள் பயிற்சி அளித்தனா்.

அயோத்தியாப்பட்டணம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்துக்கு, பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவா்கள் வேளாண் பயிற்சிக்காக வந்துள்ளனா்.

இந்த மாணவா்கள் பூச்சிக்கொல்லிகளை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது குறித்து அயோத்தியாப்பட்டணம் அருகே வீராணம் ஊராட்சியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு வயல்வெளியில் செயல்விளக்கப் பயிற்சி அளித்தனா்.

அயோத்தியாப்பட்டணம் உதவி தோட்டக்கலை அலுவலா் கே.விஐய்குமாா் முன்னிலையில் நடைபெற்ற இப் பயிற்சி முகாமில், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டின்போது கையுறைகள் மற்றும் முகக் கவசம் அணிய வேண்டுமென விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com