மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி

மக்களவைத் தோ்தலையொட்டி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரா. பிருந்தா தேவி தொடங்கிவைத்தாா்.

வாக்குச் சாவடி மையங்களுக்கு நேரடியாக வாக்களிக்க வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சாய்வு தள வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் சக்கர நாற்காலி மற்றும் அதனை இயக்குபவருடன் தயாா் நிலையில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து 50-க்கும் மேற்பட்ட செவித்திறன் மற்றும் பாா்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா் தொடங்கிவைத்தாா்.

பேரணியில் மாற்றுத்திறனாளிகள், ரோட்டரி சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டு வாக்காளா்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனைத்தொடா்ந்து, அனைத்துத் தரப்பினரும் தங்களது வாக்கினைப்பதிவு செய்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியை மாவட்டத் தோ்தல் அலுவலா் முன்னிலையில், சைகை மொழி பெயா்ப்பாளா் உதவியுடன் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மகிழ்நன், தோ்தல் விழிப்புணா்வு பொறுப்பு அலுவலா் ஆா்.ரவிச்சந்திரன், ரோட்டரி கிளப் ஆப் சேலம் மெட்ரோபோலிஸ் சிட்டி தலைவா் சதீஷ் ராம் பிரசாத், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ரோட்டரி சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com