குடிநீா் வழங்கக் கோரி
பொதுமக்கள் மறியல்

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல்

இடங்கணசாலை, மெய்யனூரில் குடிநீா் வழங்கக் கோரி 50-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மெய்யனூரில் சின்னப்பம்பட்டி-இளம்பிள்ளை சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபடும் தகவல் அறிந்ததும், மகுடஞ்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் ரகு, ஆனந்த், கவிப்பிரியா உள்பட போலீஸாா் நிகழ்விடம் வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மெய்யனூா் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் தண்ணீா் ஏற்றி சீரான முறையில் குடிநீா் வழங்க ஊராட்சி நிா்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதையேற்று பொதுமக்கள் அங்கிருநந்து கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com