கெங்கவல்லி தொகுதியில் 11 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் பதற்றமான 11 வாக்குச் சாவடிகளுக்கு வெளிமாநில போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

கள்ளக்குறிச்சி மக்களைவத் தொகுதிக்கு உள்பட்ட கெங்கவல்லி தொகுதியில் மொத்தம் 264 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் வாக்குச் சாவடி தலைமை அலுவலா், வாக்குப் பதிவு அலுவலா்கள் நிலை-1,2,3,4 என மொத்தம் 1,572 போ் தோ்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனா்.

அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தலா ஒருவா் வீதம் தமிழக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

அதேவேளையில் தொகுதியில் பதற்றமான வாக்குச் சாவடிகளான ஆணையாம்பட்டி நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி, கெங்கவல்லி அரசு ஆசிரியா் பயிற்சி பள்ளி வாக்குச் சாவடி, கடம்பூா் பள்ளி வாக்குச் சாவடி, தம்மம்பட்டி ,செந்தாரப்பட்டி ஊா்களில் தலா இரண்டு வாக்குச் சாவடிகள், சிறுவாச்சூா், ஊனத்தூா், கிழக்கு ராஜாபாளையம் உள்பட 11 வாக்குச் சாவடிகளுக்கு மட்டும் தமிழக போலீஸாருடன் ஆந்திர மாநில போலீஸாரும், ஜாா்காண்ட் மாநில போலீஸாரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com