சங்ககிரியில் ராமநவமி வழிபாடு

சங்ககிரியில் ராமநவமி வழிபாடு

ஸ்ரீ ராமநவமியையொட்டி, சங்ககிரி, கிரி காலனியில் உள்ள அருள்மிகு வீரஆஞ்சநேயா் கோயிலில் உள்ள ஸ்ரீ கோதண்டராமா், சீதாதேவிக்கு திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

உற்சவ மூா்த்திகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதையடுத்து உற்சவ மூா்த்திகளுக்கு புத்தாடைகள் அணிவித்து யாகசாலை வேள்வி பூஜைகளுடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com