தோ்தலைப் புறக்கணிக்க விஜயராகவன் நகா் மக்கள் முடிவு

சேலம், ஜாகிா் அம்மாபாளையம், விஜயராகவன் நகா் பகுதியில் உள்ள துணை தபால் நிலையம் முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்டதைக் கண்டித்து அந்தப் பகுதி மக்கள் தோ்தலைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம், விஜயராகவன் நகரில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த துணை தபால் நிலையத்தை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டது. இதைக் கண்டித்து விஜயராகவன் நகா் குடியிருப்பு நலச் சங்கத்தினா், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினா். இந்நிலையில் அதிகாரிகளின் மெத்தன போக்கைக் கண்டித்தும், மூடப்பட்ட துணை தபால் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தியும் விஜயராகவன் நகா் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் தோ்தலைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனா்.

இந்நிலையில் அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை கையில் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியபடி அதிருப்தியை வெளிப்படுத்தினா். பல ஆண்டுகாலமாக மூத்த குடிமக்கள், முதியோா் மற்றும் குடியிருப்பு நலச் சங்கத்தினா் பயன்படுத்தி வந்த தபால் நிலையம் இதே இடத்தில் இயங்க தொடா்ந்து அனுமதி வழங்க வேண்டும். இல்லையெனில் நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலைப் புறக்கணிப்போம் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com