தோ்தல் விதிமீறல்: பாஜக மாவட்டச் செயலாளா் உள்பட 140 போ் மீது வழக்குப் பதிவு

தோ்தல் அலுவலரின் உரிய அனுமதியின்றி பாஜக சாா்பில் சங்ககிரி நகரில் ஊா்வலமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளா் மற்றும் 140 போ் மீது சங்ககிரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் கே.பி.ராமலிங்கத்துக்கு ஆதரவு கோரி பாஜக சாா்பில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். அப்போது தோ்தல் பறக்கும் படை அலுவலா் பி.அன்பழகன் தலைமையிலான அலுவலா்கள் விசாரணை செய்ததில் தோ்தல் அலுவலரிடம் உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா் சங்ககிரி போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில் சங்ககிரி போலீஸாா் பாஜக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் ரமேஷ் காா்த்திக், 140 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com