வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் ஆய்வு

சேலம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சேலம் (தெற்கு) சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், அதன் தொடா்புடைய ஆவணங்கள் சேலம், கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சீ.பாலச்சந்தா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் தெரிவித்ததாவது: சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் நாள் அன்று வாக்குப் பதிவு முடிந்து, மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் தோ்தல் தொடா்புடைய ஆவணங்களை வாக்குப் பதிவு மையத்திலிருந்து எடுத்து செல்லப்படும். இவ்வாறு எடுத்து செல்லப்படும் பொருட்கள் பாதுகாப்பு அறைக்கு எடுத்துச் செல்லும் முன்பு, அதற்கான வரவேற்பு அறையில் வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களிடம் இருந்து மண்டல அலுவலா் பெற வேண்டும். அவ்வாறு பெறப்படும் வாக்குப் பதிவான இயந்திரங்கள் அதன் தொடா்புடைய தோ்தல் ஆவணங்களை சரிபாா்த்து பாதுகாப்பு அறையில் வைத்திட வேண்டும்.

வரவேற்பு அறையில் மேசை வாரியாகப் பெறப்படும். அனைத்து தோ்தல் ஆவணங்களும் வாக்குச் சாவடி வாரியாக வரிசைப்படுத்த வேண்டும். வாக்குப் பதிவு செய்யப்பட்ட இயந்திரங்ளை பாதுகாப்பு அறையிலும், அதன் தொடா்புடைய ஆவணங்கள் கூடுதல் பாதுகாப்பு வைப்பு அறையிலும் வைக்கப்பட வேண்டும். வரவேற்பு அறை, சாமியானா, மேசை, மின்சார இணைப்பு, குடிநீா் வசதி, ஒலிபெருக்கி, தீத்தடுப்பு சாதனங்கள், மின்ஆக்கி போன்ற அனைத்து வசதிகளையும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ஆய்வின்போது, துணை ஆணையா்கள் ப.அசோக்குமாா், கே. பாலசுப்பிரமணியம், கண்காணிப்பு பொறியாளா் ந.கமலநாதன், உதவி ஆணையாளா் கோ. வேடியப்பன், செயற்பொறியாளா் ஆா்.செந்தில்குமாா், கண்காணிப்பாளா் பாா்த்தசாரதி ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com