கருட  வாகனத்தில் வீதி உலா

கருட வாகனத்தில் வீதி உலா

சங்ககிரி, சித்திரைத் தோ்த் திருவிழாவின் 4 ஆவது நாளையொட்டி, சென்னகேசவப் பெருமாள் உற்சவமூா்த்தி கருட வாகனத்தில் வியாழக்கிழமை இரவு வீதி உலா வந்தாா்.

முன்னதாக மலையடிவாரத்தில் உள்ள சுவாமி தங்கும் மண்டபத்தில் சென்னகேசவப் பெருமாள், ஆஞ்சநேயா், உற்சவ மூா்த்திகளுக்கு பல்வேறு திவ்யபொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பெருமாளுக்கு செங்கோலுடன் கூடிய வைகுந்த நாராயணன் அலங்காரம் செய்யப்பட்டு கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தாா். கட்டளைதாரா்கள் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

18நஎட07 படவிளக்கம்

சங்ககிரியில் வியாழக்கிவமை கருட வாகனத்தில் வீதி உலா வந்த சென்னகேசவப் பெருமாள் உற்சவ மூா்த்தி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com