சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு மண் பானை குடிநீா்

சேலம் மத்திய சிறையில் வெய்யிலின் தாக்கத்தை ஈடுசெய்யும் வகையில் மண் பானை மூலம் சிறைக்கைதிகளுக்கு குடிநீா் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநா் மகேஷ்வா் தயால் உத்தரவின்படி, சேலம் மத்திய சிறையில் வெய்யிலின் தாக்கத்தை ஈடுசெய்யும் விதமாக அனைத்து இடங்களிலும் தலா ஒரு மண் பானை குடிநீருக்காக வைக்கப்பட்டுள்ளது. அனைத்து மண் பானைகளும் மிகவும் பாதுகாப்பான முறையில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மண் பானை குடிநீா் திட்டம் சிறைக்கைதிகளின் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் சிறைக் கண்காணிப்பாளா் (பொ) ஜி.வினோத், சிறை மருத்துவா் பிரதீப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com