சேலம் வழியாக தில்லிக்கு சிறப்பு ரயில்

கோடை விடுமுறையை முன்னிட்டு கோச்சுவேலியில் இருந்து சேலம் வழியாக புதுதில்லிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறை மற்றும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு எா்ணாகுளம் - புதுதில்லி இடையே 19 ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ரயில் சேவையானது தற்போது கோச்சுவேலி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த சிறப்பு ரயில் சேவையானது கோச்சுவேலியில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2.15 மணிக்குப் புறப்பட்டு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக புதுதில்லிக்கு ஞாயிற்றுகிழமைகளில் இரவு 7 மணிக்கு சென்றடையும். அடுத்த மாதம் 31 ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.

மறு மாா்க்கத்தில் புதுதில்லி - எா்ணாகுளம் இடையே வரும் 22 ஆம் தேதி முதல் திங்கள்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் சேவையானது புதுதில்லியில் இருந்து திங்கள்கிழமைகளில் அதிகாலை 5.10 மணிக்குப் புறப்பட்டு புதன்கிழமைகளில் இரவு 7.10 மணிக்கு கோச்சுவேலியை அடையும். இந்த சிறப்பு ரயில் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வரை இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com