கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் அறைக்கு ‘சீல்’

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் அறைக்கு ‘சீல்’

ஆத்தூா், ஏப். 20: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணும் மையமான வாசுதேவனூா், ஸ்ரீ மகாபாரதி பொறியியல் கல்லூரியில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷ்ரவண்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் சேலம் மாவட்டத்தில் ஆத்தூா், கெங்கவல்லி, ஏற்காடு சட்டப்பேரவை தொகுதிகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம், சங்கராபுரம், ரிஷிவந்தியம் சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கும். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமாக தலைவாசலை அடுத்துள்ள வாசுதேவனூரில் உள்ள ஸ்ரீ மகாபாரதி பொறியியல் கல்லூரி உள்ளது.

இந்தக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு இயந்திரங்களும் மையத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இப்பணி சனிக்கிழமை மதியம் வரை நீடித்தது.

அனைத்து வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷ்ரவண்குமாா், தோ்தல் பொது மேற்பாா்வையாளா் அசோக்குமாா் காா்க் ஆகியோா் முன்னிலையில் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டு அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இங்கு முகவா்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பட விளக்கம்.ஏடி20கலெக்டா்...

வாசுதேவனூா், ஸ்ரீ மகாபாரதி பொறியியல் கல்லூரியில் வாக்குப் பெட்டிகள் வைத்துள்ள அறைக்கு ‘சீல்’ வைத்த தோ்தல் நடத்தும் அலுவலா் ஷ்ரவண்குமாா்.

X
Dinamani
www.dinamani.com