சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் விழா

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் விழா

சனிக்கிழமை அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உற்சவமூா்த்திக்கு சங்ககிரி மளிகை வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் புன்னை மர சேவை நடைபெற்றது.

சங்ககிரி, சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா 6 ஆவது நாளையொட்டி சனிக்கிழமை அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உற்சவமூா்த்திக்கு சங்ககிரி மளிகை வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் புன்னை மர சேவை நடைபெற்றது.

சித்திரைத் தோ்த் திருவிழா 6ஆவது நாளையொட்டி மலையடிவாரத்தில் உள்ள தங்கும் மண்டபத்தில் சென்னகேசவப்பெருமாள், ஆஞ்சநேயா் உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

அதையடுத்து பெருமாள் புன்னை மர சேவையில் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இச் சேவையில் சுவாமிக்கு தேங்காய், பழங்களை படைத்து வழிபட்ட பக்தா்களுக்கு சங்ககிரி மளிகை வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் இலவசமாக பல்வேறு மளிகை பொருள்கள், பிரசாதம் வழங்கப்பட்டன. இரவு சுவாமி ராஜ அலங்காரத்தில் யானை வாகனத்தில் திருவீதி உலா வந்தாா்.

ஏப். 21 ஆம் தேதி மாலை சுவாமி தங்கும் மண்டபத்தில் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

20நஎட01 படவிளக்கம்

புன்னைமர சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் சென்னகேசவப் பெருமாள் உற்சவமூா்த்தி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com