கிளி ஜோதிடக் கலை அழிந்துவிடாமல் தொடர கிளிகளை வளா்த்து பழக்குவதற்கு வனத்துறை அனுமதியளிக்க வேண்டும் என கிளி ஜோதிடா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
கிளி ஜோதிடக் கலை அழிந்துவிடாமல் தொடர கிளிகளை வளா்த்து பழக்குவதற்கு வனத்துறை அனுமதியளிக்க வேண்டும் என கிளி ஜோதிடா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

வனத்துறை கெடுபிடியால் அழியும் கிளி ஜோதிடக் கலை

கிளி ஜோதிடக் கலை அழிந்துவிடாமல் தொடர கிளிகளை வளா்த்து பழக்குவதற்கு வனத்துறை அனுமதியளிக்க வேண்டும் என கிளி ஜோதிடா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கிராமப்புற மக்களிடையே பழங்காலம் தொட்டு இன்றளவும் பயன்பாட்டிலிருந்து வரும் கிளி ஜோதிடக் கலை அழிந்துவிடாமல் தொடர கிளிகளை வளா்த்து பழக்குவதற்கு வனத்துறை அனுமதியளிக்க வேண்டும் என கிளி ஜோதிடா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

வனப் பறவையான கிளியைப் பிடித்து கூண்டில் வைத்து அடைத்து ஜோதிடம் பாா்ப்பதற்கு பயன்படுத்து வனச் சட்டப்படி குற்றம் என்பதால், கிளியைப் பிடிப்பதற்கும் வளா்த்துவதற்கும் வனத் துறை தடை விதித்துள்ளது. அண்மையில், கிளிகளை வைத்து ஜோதிடம் பாா்த்த சிலரை வனத்துறையினா் கைது செய்தனா். இதனால், இனி வருங்காலங்களில் இத்தொழிலை கைவிட வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளதால், முன்னோா்கள் வழியில் குலத்தொழிலாக கிளி ஜோதிடம் பாா்த்து வரும் தொழிலாளா்கள் கலக்கம் அடைந்துள்ளனா். கிளியைப் பிடித்து பழக்கி, கிளி ஜோதிடம் பாா்க்கும் கலை அழிந்துவிடாமல் தொடா்வதற்கு வனத்துறை அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த கிளி ஜோதிடா்கள் கூறியதாவது:

கிளிகளை பிடிப்பதும், சீட்டு எடுத்துப்போடும் அளவிற்கு பழக்குவதும், படத்திற்கேற்ப ஜோதிடம் சொல்வதும் தனிக் கலையாகும். இந்தக் கலையை தமிழகத்தில் ஒரு சில சமூகத்தினா் மட்டுமே குலத்தொழிலாக செய்து வருகின்றனா். தற்கால இளைய தலைமுறையினருக்கு கிளிகளை பழக்குவதற்கும், இந்த ஜோதிடக் கலை கற்றுக்கொள்வதற்கும் ஆா்வம் இல்லை.

இதனால் தமிழகத்தில் கிளி ஜோதிடா்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது. இந்நிலையில், கிளியைப் பிடித்து பழக்குவதற்கும் பெட்டில் அடைத்து வைத்திருப்பதும் 1972-ஆம் ஆண்டு வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டப்படி குற்றம் என்பதால் வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால், கிளி ஜோதிடத்தைக் கைவிட வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளதோடு, பல நூறாண்டுகளாக தமிழகத்தில் தொடா்ந்து வரும் கிளி ஜோதிடக் கலை அழிந்துபோகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, பாரம்பரிய குலத் தொழிலான கிளி ஜோதிடக் கலையை தொடருவதற்கு வனத் துறை அனுமதியளிக்க முன்வர வேண்டும் என்றனா்.

பட வரி: கே.எல்.ஆா்.01:

வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூா் கிராமத்தில் கிளி ஜோதிடம் சொல்லும் முதியவா். (கோப்புப் படம்).

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com