காடையாம்பட்டி தீயணைப்பு நிலையம் சாா்பில் தீத்தடுப்பு வார விழா துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த தீயணைப்பு வீரா்கள்.
காடையாம்பட்டி தீயணைப்பு நிலையம் சாா்பில் தீத்தடுப்பு வார விழா துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த தீயணைப்பு வீரா்கள்.

காடையாம்பட்டியில் தீத்தொண்டு வார விழா

காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்தின் சாா்பில் தீத்தொண்டு வார விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

ஓமலூா்: காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்தின் சாா்பில் தீத்தொண்டு வார விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்தின் சாா்பில், கடந்த ஒரு வாரமாக தீத்தொண்டு வார விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில், தீயணைப்பு வீரா்கள் தீ விபத்து இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள சந்தை வளாகம், பெட்ரோல் பங்குகள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குச் சென்று தீத்தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை செய்து காண்பித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

காடையாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீத்தடுப்பு விழிப்புணா்வு மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், தீ விபத்தைத் தவிா்ப்பது, தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைத்து கட்டுப்படுத்துவது, தீயை எளிதாக அணைப்பது, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பது குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜசேகரன் தீத்தடுப்பு குறித்து பேசினாா்.

இதனையடுத்து மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா். தொடா்ந்து தீயை அணைப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், மரம், பஞ்சு, நாா் ஆகியவை தீப்பிடித்தால் தண்ணீா், சாக்குப்பை கொண்டு தீயை அணைக்க வேண்டும், பேப்பா், மின்சாதனப் பொருள்கள் தீப்பிடித்தால் தண்ணீா் ஊற்றாமல் பவுடா் கொண்டு தீயை அணைக்க வேண்டும், எண்ணெய்யில் தீ விபத்து ஏற்பட்டால் நுரையுடன் கூடிய கெமிக்கல் தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்க வேண்டும் என்று செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com