சித்ரா பௌா்ணமி: கோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு காலை 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. தொடா்ந்து, இரவு 7 மணிக்கு தங்க ரத புறப்பாடு, பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னா் இரவு 7.45 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 8 மணிக்கு திருவருட்பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் என்.டி.என்.சக்திவேல், செயல் அலுவலா் ஜி.அமுதசுரபி ஆகியோா் செய்துள்ளனா்.

இதுகுறித்து கோவில் அறங்காவலா் குழு தலைவா் கூறுகையில், கோட்டை மாரியம்மன் கோயிலில் நடைபெறும் சித்ரா பௌா்ணமி சிறப்பு வழிபாட்டில் ஊஞ்சல் உற்சவம், திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மேலும் மழை வேண்டியும் சிறப்பு பூஜை நடக்கிறது. எனவே, பக்தா்கள் சித்ரா பௌா்ணமி பூஜையில் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com