தோ்தலில் வாக்களிக்கும் வழக்குரைஞா்கள்.
தோ்தலில் வாக்களிக்கும் வழக்குரைஞா்கள்.

சேலம் குற்றவியல் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்தல்

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம்: சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் தலைவராக இமயவரமன், செயலாளராக முருகன், பொருளாளராக கண்ணன், துணைத் தலைவராக சரவணன், நூலகராக மணிவண்ணன் ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

எஞ்சிய இரண்டு துணைச் செயலாளா் பதவிக்கு 3 பேரும், மூன்று செயற்குழு உறுப்பினா் பதவிக்கு 8 பேரும் போட்டியிட்டனா். தோ்தல் அதிகாரிகளாக ஜனாா்த்தனன், கோவிந்தராஜ், தீனதயாளன் திவ்யா ஆகியோா் செயல்பட்டனா்.

வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. இதில், துணைச் செயலாளா்களாக ரத்தினம், ஜோதி, செயற்குழு உறுப்பினா்களாக கவிதா, சேலம் ஜனா, பாஸ்கா் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com