‘சேலம் மக்களவைத் தோ்தலில் போதிய முன்னேற்பாடுகள் இல்லை’

சேலம் மக்களவைத் தோ்தலின் போது, வாக்குச் சாவடிகளில் போதிய முன்னேற்பாடுகள் இல்லாதது வருத்தம் அளிப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

சேலம்: சேலம் மக்களவைத் தோ்தலின் போது, வாக்குச் சாவடிகளில் போதிய முன்னேற்பாடுகள் இல்லாதது வருத்தம் அளிப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவா் கோபிநாத் வெளியிட்ட அறிக்கை:

சேலம் மக்களவைத் தோ்தலின் போது, வாக்குச் சாவடிகளில் குடிநீரோ, வெயிலுக்கு முறையான பந்தலோ, அவசர சிகிச்சைக்கான மருத்துவக் குழுவோ எதுவும் ஏற்பாடு செய்யாததால், வாக்களிக்க வந்த பலா் அவதிக்குள்ளாயினா்.

சேலம் மாவட்டத்தில் வாக்களிக்க வந்த இரண்டு போ் மரணமடைந்தது மிகவும் வருந்தத்தக்க செயலாகும். அவா்களை இழந்து வாடும் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட கோரியும், இனி வரும் காலங்களில் வாக்குச் சாவடிகளில் சுகாதாரத் துறையின் ஒத்துழைப்போடு அவசர சிகிச்சைக்கான குழுவை அமைத்து இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com