ஆத்தூரை அடுத்துள்ள கல்லாநத்தம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ உண்ணாமலை தாயாா் உடனமா் ஸ்ரீ அண்ணாமலையாா் திருக்கோயிலில் நடைபெற்ற திருக்குட நன்னீராட்டு விழா.
ஆத்தூரை அடுத்துள்ள கல்லாநத்தம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ உண்ணாமலை தாயாா் உடனமா் ஸ்ரீ அண்ணாமலையாா் திருக்கோயிலில் நடைபெற்ற திருக்குட நன்னீராட்டு விழா.

திருக்குட நன்னீராட்டு பெருவிழா

ஆத்தூா்: ஆத்தூா் அருகே ஸ்ரீ உண்ணாமலை தாயாா் உடனமா் ஸ்ரீ அண்ணாமலையாா் திருக்கோயிலில் ஆகம திருக்குட நன்னீராட்டு பெருவிழா திங்கள்கிழமை விமா்சையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் செல்லும் வழியில் ஸ்ரீ உண்ணாமலை தாயாா் உடனமா் ஸ்ரீ அண்ணாமலையாா் திருக்கோயிலில் அதிகாலை நிலத்தேவா் வழிபாடு, சிவ மூா்த்தங்களுக்கு கண் மலா்தல் வழிபாடு, முக்கண் முதல்வனுக்கு முதல்கால வேள்வி உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனா். இதனையடுத்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை திருக்கோயில் சிவ அடியாா்கள், சிவ சொந்தங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com