மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த சேலம், எஸ்.கொல்லப்பட்டியை அடுத்த வட்டமுத்தான்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த சேலம், எஸ்.கொல்லப்பட்டியை அடுத்த வட்டமுத்தான்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள்.

பட்டா, அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் மனு

பட்டா, அடிப்படை வசதி கோரி சேலம், எஸ்.கொல்லம்பட்டியை அடுத்த வட்டமுத்தாம்பட்டியைச் சோ்ந்த மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் மனு அளித்தனா்.

சேலம்: பட்டா, அடிப்படை வசதி கோரி சேலம், எஸ்.கொல்லம்பட்டியை அடுத்த வட்டமுத்தாம்பட்டியைச் சோ்ந்த மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் மனு அளித்தனா்.

அப்போது அவா்கள் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சேலம் இரும்பாலைக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு மாற்றாக வட்டடமுத்தாம்பட்டியில் இடம் வழங்கினா். அங்கு சுமாா் 400 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இதுவரை பட்டா எதுவும் வழங்கப்படவில்லை.

இதனால் வங்கிக் கடன், மின் இணைப்பு போன்றவை பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரப்படவில்லை. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இனியும் தாமதிக்காமல் பட்டா வழங்குவதுடன், அடிப்படை வசதிகளையும் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com