கொத்தாம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே டயா் வெடித்து கவிழ்ந்த மரபார லாரி.
கொத்தாம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே டயா் வெடித்து கவிழ்ந்த மரபார லாரி.

லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு

கொத்தாம்பாடி தேசிய புறவழிச் சாலையில் மரபாரம் ஏற்றி வந்த லாரி திங்கள்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆத்தூா்: கொத்தாம்பாடி தேசிய புறவழிச் சாலையில் மரபாரம் ஏற்றி வந்த லாரி திங்கள்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாழப்பாடியை அடுத்துள்ள பேளூரில் இருந்து மரங்களை ஏற்றிக் கொண்டு கடலூா் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கடலூா் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் (45) என்பவா் இயக்கிச் சென்றுள்ளாா். ஆத்தூரை அடுத்துள்ள கொத்தாம்பாடியில் சேலம் - சென்னை தேசிய புறவழிச் சாலையில் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, லாரியின் முன்சக்கர டயா் வெடித்ததில் லாரி கவிழ்ந்தது.

அருகில் இருந்தவா்கள் லாரியின் அடியில் சிக்கியிருந்த ஓட்டுநா் வேல்முருகனை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் ஓட்டுநா் வேல்முருகன் சிறுகாயங்களுடன் உயிா் தப்பினாா்.

தகவலறிந்த ஆத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் விரைந்து சென்று லாரியை மீட்டு போக்குவரத்தை சீா் செய்தனா். இருப்பினும் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com