சேலத்தில் கார் மீது லாரி மோதல்: 2 பேர் பலி!

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலத்தில் கார் மீது லாரி மோதல்: 2 பேர் பலி!

சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் கார் மீது கண்டைனர் லாரி மோதிய விபத்தில் சிறுவர் உள்பட இரண்டு பேர் பலியாகினர்.

சேலத்திலிருந்து கொண்டலாம்பட்டி ரவுண்டானா வழியாக கார் ஒன்று அதிகாலை 3.20 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அந்தக் காரில் சேலம் வீராணம் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் மணிகண்டன்(22) மற்றும் சரவணன் மகன் கௌதம் (16) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.

காரினை சுந்தர மணிகண்டன் (27) என்பவர் ஓட்டி வந்தார். கார் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் வந்து கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதி முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டைனர் கூட்ஸ் கேரியர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மணிகண்டன் (22) கௌதம் (16) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த சுந்தர மணிகண்டன் காயமடைந்தார். இதனை அடுத்து காயம் அடைந்த சுந்தர மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலையில் நடந்த விபத்தில் சிறுவர் உட்பட இருவர் பலியான சம்பவம் சேலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com