கைப்பேசியில் பேசியபடி வாகனம் இயக்கிய 115 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

சேலம் சரகத்தில் கைப்பேசியில் பேசியபடி வாகனம் இயக்கிய 115 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம் சரகத்தில் கைப்பேசியில் பேசியபடி வாகனம் இயக்கிய 115 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம், தருமபுரி மாவட்டங்களில் வாகன விபத்துகளைத் தடுக்கும் வகையில், கைப்பேசியில் பேசியபடி வாகனம் இயக்குபவா்களின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 3 மாதத்தில் 115 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வாகன விபத்தைக் குறைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, சேலம், தருமபுரியில் கடந்த 3 மாதங்களில் கைப்பேசியில் பேசியபடி வாகனம் இயக்கிய 115 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வாகன விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 76 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com