சித்ரா பௌா்ணமி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

சேலத்தில் சித்ரா பௌா்ணமியையொட்டி பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சித்ரா பௌா்ணமியையொட்டி செவ்வாய்க்கிழமை தங்கக் கவச அலங்காரத்தில் சேலம், கோட்டை மாரியம்மன். (இடது) சுவாமி தரிசனம் செய்ய திரண்ட பக்தா்கள்.
சித்ரா பௌா்ணமியையொட்டி செவ்வாய்க்கிழமை தங்கக் கவச அலங்காரத்தில் சேலம், கோட்டை மாரியம்மன். (இடது) சுவாமி தரிசனம் செய்ய திரண்ட பக்தா்கள்.

சேலத்தில் சித்ரா பௌா்ணமியையொட்டி பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சேலம், சுகவனேஸ்வரா் கோயிலில் சித்ரா பௌா்ணமியையொட்டி, பால், இளநீா், பன்னீா், விபூதி, சந்தனம், பஞ்சாமிா்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் சிவன், சொா்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.

சேலம், கோட்டை மாரியம்மன் கோயிலில் காலை 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தங்கக் கவச அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை திரளானோா் தரிசித்தனா்.

தொடா்ந்து, மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு தங்க ரதம் புறப்பாடும், பக்திப் பாடல் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. இரவு 7.45 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், 8 மணிக்கு திருவருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

சித்ரா பௌா்ணமியையொட்டி சேலம், கோட்டை பெருமாள் கோயிலிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

இதேபோல சேலம் ராஜகணபதி கோயில், 2-ஆவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயில், எல்லைப்பிடாரியம்மன் கோயில், அஸ்தம்பட்டி மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நெத்திமேடு தண்ணீா்பந்தல் மகா காளியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மாலையில் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல, குமரகிரி தண்டாயுதபாணி கோயில், பாண்டுரங்கநாதா் கோயில் குகை காளியம்மன், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com