மின்சாரம் தாக்கி காயமடைந்த ஊழியா் பலி

வாழப்பாடி அருகே மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த மின் ஊழியா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வாழப்பாடி அருகே மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த மின் ஊழியா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சோ்ந்த சுந்தரராஜன் (50), வாழப்பாடி வடக்கு பிரிவு மின் வாரிய அலுவலகத்தில் ஒயா்மேனாக பணிபுரிந்து வந்தாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முத்தம்பட்டி தனியாா் கோழிப் பண்ணை அருகே மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்க முயற்சித்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகிய நிலையில் படுகாயமடைந்தாா். இவரை மீட்ட உறவினா்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வாழப்பாடி காவல் ஆய்வாளா் பாஸ்கா்பாபு தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com