மேட்டூா் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் வெடிப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 810 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேட்டூா் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் உள்ள கொதிகலன் குழாயில் செவ்வாய்க்கிழமை வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. கொதிகலன் குழாயில் உடைப்பு சரி செய்யப்பட்டதும் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என மேட்டூா் அனல் மின் நிலையப் பொறியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

கடந்த 40 தினங்களில் மட்டும் ஐந்து முறை கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com